வீடு எம்மைப்பற்றி சேவைகள் கருத்திட்டங்கள் செய்திகளும் தரைஇறக்கம் இணைப்பு
Home Government web site of  Sri Lanka
செய்திகளும் நிகழ்வுகளும்

உயர்தரத்தின் பின்னர் என்ன?

இலங்கை மாணவர்களுக்கான பட்டமுன்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களின் ஆராய்ச்சிப்பட


 
 
வரவேற்பு !

உயர்கல்வியானது, தனிநபர்களின் சாதனையை மட்டும் நோக்காகக் கொள்ளாது, பிரதானமாக சமுதாயத்தின் பொருளாதாரச் செழிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

அரசாங்கத்தின் “மஹிந்த சிந்தனை” கொள்கையின்கீழ் “சகலருக்குமான பல்கலைக்கழகங்கள்” நிகழ்ச்சித்திட்டமானது, உயர்கல்வி பிரிவில் உயிர்ப்பான முறையில் செயலாக்கப்படும்.

அரசாங்கமானது, நாட்டின் உயர்தர கல்வியில் சித்திபெறும் அனைத்து மாணவர்களினாலும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இக்கொள்கையின்கீழ், பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையானது, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன்மூலமும், பல்கலைக்கழகங்களினதும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களினதும் வசதிகளை அதிகரிப்பதன்மூலமும் அதிகரிக்கப்படும்.
மேலும்....


அமைச்சரின் உரை

எந்தவொரு நாட்டினதும் சமுக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் உயர்கல்வியானது ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. எமது பல்கலைக்கழக பட்டதாரிகள் கைத்தொழில்களுக்கு அவசியமான அறிவுத்திறமைகளுடன் பயிற்றப்படல் வேண்டிய அதேவேளையில், அவர்கள், நிலைபேறான பொருளாதார மற்றும் சமூக செழிப்பினை முன்னேற்றமடையச் செய்வதற்கான புதிய அறிவுத்திறனுக்கு பங்களிப்புச் செய்வதற்கு சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றலுடன்கூடிய பகுப்பாய்வுத் திறன்களின் உயர்தரத்தினையும் விருத்தி செய்தல் வேண்டும்.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல், அரசாங்கமே கல்வியின் முதன்மைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்புடன், பல்கலைக்கழகங்களுக்கான பகிரங்க நிதி வழங்கல் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களின் (புனுP) ஒரு சதவீதமானது, உயர்கல்விக்கான நிதியாக வழங்கப்படுவது, உலகின் ஏனைய அனேக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளையும் விஞ்சுவதாகக் காணப்படுகின்றது.
மேலும்....

 
 
 
கருத்திட்டங்கள்
சுனாமி புனர்நிர்மாண கருத்திட்டம்

அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியமானது நாட்டின் வடக்கு, கிழக்கு, மற்றும் தெற்கு மாகாணங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்வி மற்றும் நிர்வாக உள் அமைப்புக்களை மீளக் கட்டியெழுப்ப மற்றும் புனர்நிர்மாணம் செய்வதற்கென, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின்கீழ் குவைத் அரசாங்கமானது, இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் இலங்கை அரசாங்கத்துடன் கூட்டு ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்....
 


 
© 2007 Ministry of Higher Education All Rights Reserved – Developed in Association with Site By
Home Government web site of  Sri Lanka