இலங்கையில் பல்கலைக்கழக முறைமையின் அதி உயர் நிறுவனமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (ப.மா.ஆ) இருப்பதோடு அது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் 1978 திசம்பர் 22 ஆம் திகதி தாபிக்கப்பட்டதாகும். ப.மா.ஆ. தொழிற்பாடுகளாக பல்கலைக்கழக கல்வியை திட்டமிடலும் ஒருங்கிணைத்தலும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்தல், கல்வித் தராதரங்களை பேணுதல், உயர் கல்வி நிறுவனங்களின் நிருவாகத்தை ஒழுங்குறுத்தல் மற்றும் உயர் கல்வி நிறுவகங்களுக்கு மாணவர்களின் அனுமதியை ஒழுங்குறுத்தல் என்பனவாகும்.