உயர் கல்வி அமைச்சின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக இருப்பது யாதெனில் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் இளமாணிப் பட்ட, பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை இலங்கையர்கள் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதாகும். விண்ணப்பதாரிகளை தெரிவு செய்வதில், அதில் வெளிப்படைத்தன்மையும் திறந்த செயற்பாடும் காணப்படுவதற்காகவும் மிகச் சிறந்த விண்ணப்பதாரிகளை தெரிவு செய்வதற்காக விளம்பரம் ஒன்றினூடாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது அமைச்சின் இணையத்தளத்திலும் தினசரி பத்திரிகைகளிலும் வெளிப்படுகின்றன. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள், அனுபவமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவொன்றினால் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தெரிவு செய்யப்பட்ட சிறந்த விண்ணப்பதாரிகள், உரிய புலமைப்பரிசில் முகவராண்மையினால் மேற்கொள்ளப்படுகின்ற இறுதித் தேர்வுக்கு பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.

செய்தி நிகழ்வுகள்