வட்டி இல்லாத மாணவர் கடன் யோசனைத் திட்டம்

கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், க. பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

7 வது உட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்

க. பொ.த (உயர்தர) பரீட்சையில் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு www.studentloans.mohe.gov.lk இணையத்தளத்தின் மூலமாக இலகுபடுத்தப்பட்டுள்ள நிகழ் நிலை(Online) முறைமையைப் பயன்படுத்த வேண்டும்.
நிகழ் நிலை விண்ணப்பங்களை 04 ஜூலை 2023 முதல் ஆகஸ்ட் 07, 2023 அன்று மதியம் 12.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

குறைந்தபட்ச நுழைவுத் தகுதிகள்

  1. ஒரே தடவையில் மற்றும் மூன்று தடவைகளுக்கு மேற்படாது அனைத்து மூன்று பாடங்களுக்காகவும் சாதாரண (S) சித்தியை பெற்றிருத்தல் வேண்டும், மற்றும்,
  2. மூன்று தடவைகளுக்கு மேற்படாது எந்த அமர்விலும் சாதாரண பொதுப் பரீட்சைக்கு குறைந்த பட்சம் 30 புள்ளிகளை பெற்றிருத்தல். (நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும் நேரத்தில் பெறப்பட வேண்டும்), மற்றும்.
  3. க. பொ.த (உயர் தர) பரீட்சையில் பொது ஆங்கிலத்தில் சாதாரண (S) சித்தி அல்லது க. பொ.த (சாதாரண தர) ஆங்கிலத்தில் சாதாரண (S) சித்தி, மற்றும்
  4. 07, ஆகஸ்ட், 2023 க்குள், அபேட்சகர்களின் வயது 26 அல்லது அதற்கு கீழ்ப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

வேறு தகைமைகள்

தயவு செய்து மாணவர் கையேட்டினை www.studentloans.mohe.gov.lk இல் பார்வையிடவும்.

 தெரிவு செய்யும் கோட்பாடுகள்

பொருத்தமான பாட நெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதானது பின்வரும் அடிப்படை களை கொண்டதாக இருக்கும்,

  1. குறைந்தபட்ச நுழைவுத் தகுதிகளை பெற்றிருத்தல்.
  2. பட்டப் பாட நெறிகளுக்கு அவர்களால் வழங்கப்படும் முன்னுரிமை விருப்புத் தொடரொழுங்கு
  3. சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களால் பட்டப் பாட நெறிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை
  4. பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் இருக்கை கொள்ளளவினை விட அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர்கள் க. பொ.த (உயர்தர) பரீட்சையில் பெற்ற Z- புள்ளிகளின் தகுதி வரிசையில் தேர்வு செய்யப்படுவர்.

  உயர்ந்தபட்ச கடன் தொகை                  

  *  4 வருட பட்டப் பாட நெறியிற்கு ரூ. 800,000/-

  *  3 வருட பட்டப் பாட நெறியிற்கு ரூ. 600,000/-

  *  Stipend எனும் மாணவர் கடனுதவித் தொகை வருடத்திற்கு ரூ. 75,000/-

கடன்களை எவ்வாறு பெறுவது

கல்வி அமைச்சானது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்கு இலங்கை வங்கிக்கு சிபாரிசு செய்கிறது மற்றும் மாணவர்கள் தமது கடன் விண்ணப்பத்தை இரண்டு பிணையாளர்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். (பெற்றோரில் ஒருவர் மற்றும் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக இருக்க வேண்டும்). அவர்களின் பொருளாதார நிலை இந்த கடன் திட்டத்திற்கு பரிசீலிக்கப்படமாட்டாது. கற்கைகளின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் பரிந்துரையின் படி செமஸ்டர் வாரியாக செமஸ்டர் கட்டணம் செலுத்தப்படும்.

மாணவர்களது பொறுப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் வசதியளிக்கப்படும் அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் பொதுத் தேர்ச்சி (“C” சித்தி) பெற வேண்டும் மற்றும் அவர்களின் படிப்பு நேரத்தில் 80% வருகையைப் பராமரிக்க வேண்டும்.

எவ்வாறு திருப்பிச் செலுத்துவது

IFSLS இற்குரிய மொத்த கடன் காலம் 12 ஆண்டுகளாகும்.
கடனைத் திருப்பிச் செலுத்துவது கற்கைக் காலத்தின் பின்னராகும் மற்றும் ஒரு வருட கால அவகாசத்திற்குப் பிறகு தொடங்கப்பட வேண்டும்.

  

  பட்டப் பாட நெறிக்கான கால எல்லை                   கடன் சலுகைக்  கால எல்லை                
 
      திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும்
    தவணைகளின் எண்ணிக்கை                     
3 வருடங்கள் 1 வருடங்கள் 4 வருடங்களின் பின்னர்
      96 சம தவணைககளில் 8 வருடங்களுக்குள்
4 வருடங்கள் 1 வருடங்கள் 4 வருடங்களின் பின்னர்
     84 சம தவணைககளில் 7 வருடங்களுக்குள்

 

 IFSLS இன் கீழ் உள்ள அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள்

  இல                      அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள்              
    i.    ஸ்ரீ லங்கா இன்ஸரிரியுட் ஒப் இன்பர்மேசன் டெக்னொளஜி (கரன்டி) லிமிட்டட் நிறுவனம் – SLIIT (மாலபே பிரதான கிளை மற்றும் மாத்தறை கிளை)       
    ii.    தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் - NSBM
   iii.    சினெக் கெம்பஸ் – CINEC
   iv.    இலங்கை பௌத்த கற்கை நிறுவனம் – SIBA
    v.     இலங்கை பட்டயக் கணக்காளர்களின் நிறுவனம் - ICASL
   vi.    சனச கெம்பஸ் லிமிட்டட் நிறுவனம் - SANASA
   vii.    ஹோரைசன் கல்லூரி ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொளஜி லிமிட்டட் – HORIZON
  viii.    காட்சு ஹைலி அட்வான்ஸ் மெடிக்கல் டெக்னொளஜி ரெயினிங் சென்ரர் (பிரைவட்) லிமிட்டட் நிறுவகம் - KIU
  ix.    எஸ். எல். ரி. கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டட் - SLTC
  x.    சீகிஸ் கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டட் நிறுவனம் – SAEGIS
  xi.    ஈசொப்ட் மெட்ரோ கம்பஸ் - ESOFT
  xii.    அக்வய்னஸ் உயர் கல்வி விஞ்ஞான நிறுவகம் – AQUINAS
  xiii.    இன்ஸ்டிடியூட் ஒப் கெமிஸ்ட்ரி சிலோன் – ICHEM
  xiv.    இன்டர் நெஷனல் கொலேஜ் ஒப் பிஸினஸ் டெக்னொலோஜி – ICBT (கொழும்பு பிரதான கிளை மற்றும் கண்டி கிளை)
  xv.    பெனடிக் கெதலிக் இன்ஸ்டிடியூட் – BCI
  xvi.    றோயல் இன்ஸ்டிடியூட் கொழம்போ (பிரைவட்) லிமிட்டட் – RIC
  xvii.   நாகாநந்தா சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனம் – NIIBS

 மேலதிக தகவல்களுக்காக பிரவேசிக்கவும் www.studentloans.mohe.gov.lk

 

செய்தி நிகழ்வுகள்