இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில்கள்
புலமைப்பரிசில்கள் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்?
நீங்கள் பூரணமாக புலமைப்பரிசில் அறிவித்தலையும் விண்ணப்பபடிவத்தையும் அமைச்சு இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு, புலமைப் பரிசில் தொடர்பான முக்கிய தகவல்கள் உள்ளிட்ட அம்சங்களை டெய்லி நிவுஸ், தினமின, மற்றும் தினகரன் செய்திப் பத்திரிகைகளில் பத்திரிகை விளம்பரங்களிலும் நீங்கள் பார்க்க முடியும். மேலதிக விபரங்களுக்காக அமைச்சு இணையத்தளத்தை பார்க்கும் படி கோரும் விளம்பரங்களையும் காணலாம்.
புலமைப்பரிசில்களை நீங்கள் எப்போது வெளியிடுவீர்கள்?
பல்வேறு நாடுகளிலிருந்து வழங்கல் கடிதங்களை பெற்றவுடன் அமைச்சு புலமைப்பரிசில் அறிவித்தல்களை வெளியிட்டு, விண்ணப்பங்களை கோருகின்றது.
மேலும் விவரங்களுக்கு: வருடாந்த புலமைப்பரிசில் நாட்காட்டி பகுதி பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
புலமைப்பரிசில் ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை தேவைப்பாடுகள் யாவை?
பட்டப்பின்படிப்பு புலமைப்பரிசிலுக்கு
- அனைத்து விண்ணப்பதாரிகளிலும் அரசாங்கத்துறை, சபைகள், கூட்டுத்தாபனம் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களாக இருத்தல் வேண்டும். (எவ்வாறாயினும் ஜப்பானிய புலமைப்பரிசில்கள் தனியார் துறைக்கும் ஏற்புடையதாகும்)
- நிரந்தர ஊழியர்கள் மட்டுமே தகுதிபெறுவர். ஆனால் தமது பதிவியின் உறுதிப்படுத்துகைக்கு பட்டப்பின்படிப்பு தகைமைகள் தேவையானோர் ஏற்றுக் கொள்ளப்படுவர்.
- இறுதிப்பட்டத்தில் இரண்டாந் தரம் மேல் வகுப்பு அல்லது அதற்கு மேலான வகுப்பை கொண்டிருத்தல். ஆங்கிலத்தில் சிறந்த மொழியாற்றல் அத்தியவசியமானது.
- வயதெல்லை நாட்டைப் பொறுத்து வேறுபடலாம், அனேகமானவை 40 வயதுக்கு கீழானவையே.
இளம்பட்ட புலமைப்பரிசில்களுக்கு
- விண்ணப்பதாரிகள் க.பொ.தா. (உ/த) தகைமையை கொண்டிருத்தல் வேண்டும். (வேறு எந்த தகைமையும் கருத்திற் கொள்ப்படமாட்டாது)
- ஆங்கிலத்தில் சிறந்த மொழியாற்றல் அத்தியவசியமானது.
- வயதெல்லை நாட்டைப் பொறுத்து வேறுபடலாம், அனேகமானவை 40 வயதுக்கு கீழானவையே.
வெளிநாட்டு விடுமுறை
வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் யாவை ?
- இணைப்பு 16 (உப வேந்தர், ப.மா.ஆ. தலைவர் தவிர்ந்த ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான விண்ணப்படிவம்)
- இணைப்பு 17 (உப வேந்தர், ப.மா.ஆ. தலைவருக்கான விண்ணப்படிவம்)
- அழைப்புக் கடிதம் ( அது ஒரு உத்தியோகபூர்வ விடுமுறையாக இருத்தல்)
- நிதிக் கடிதம் (பயணம், வெளியாக தரப்பொன்றினால் நிதியளிக்கப்பட்டதாக இருப்பின்)
- நியாயப்படுத்தல் கடிதம் (அதே ஆண்டில் அலுவலர் மூன்று தடவைகளுக்கு மேல் வெளிநாடு சென்றிருப்பின்)
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களின் 3 பிரதிகள்
அமைச்சிலிருந்து அனுமதியை பெறுவதற்கு நாம் விண்ணப்பத்தை எப்போது சமர்ப்பித்தல் வேண்டும்?
புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
அங்கீகாரத்தை பெறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
- Time period depends on the type of leave.
- Approval of the Prime minister is needed for official leave and it takes nearly one week to get the approval from the Prim minister’s office.
- Private leave is approved by the Hon. Minister (duration 2-3 days).
விமானப் பயணச் சீட்டுகள்
அங்கீகாரத்தை பெற சமர்ப்பிக்கப்படவேண்டிய தேவையான ஆவணங்கள் யாவை?
- உபவேந்தர், மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசுடனான காப்புக் கடிதம்
- வெவ்வேறான விமான சேவைகளிடமிருந்து மூன்று கேள்வி மனுக்கள்.
விமான பயண சீட்டொன்றுக்கு செயலாளரின் அங்கீகாரத்தை நாம் எப்போது பெற வேண்டும்?
நீங்கள் சிறிலங்கன் விமான சேவை, அல்லது மிஹின் லங்கா சேவை தவிர்ந்த வேறு ஏதாவது விமான சேவையொன்றில் பயணம் செய்ய விரும்பினால், நீங்கள் உயர் கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து விமான பயண சீட்டுக்களை அங்கீகாரத்தை பெறுதல் வேண்டும்.
பல்கலைக்கழக பிறப்பித்த நிதியம்
பல்கலைக்கழகம் பிறப்பித்த நிதியத்திற்கு கோரிக்கை விடுக்க சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
- விண்ணப்பப் படிவம்
- A முதல் G படிவம்
- நீங்கள் செலவழிக்க விரும்புகின்ற மொத்த செலவினம் பற்றிய சுருக்க விளக்கமும் உபவேந்தரின் இணக்கப்பாடும்
பல்கலைக்கழகம் பிறப்பித்த நிதியத்திற்கு நாம் எப்போது விண்ணப்பித்தல் வேண்டும்?
பல்கலைக்கழகம் பிறப்பித்த நிதியை பயன்படுத்தி நீங்கள் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பினால் உபவேந்தரின் இணக்கத்துடன் உயர் கல்வி அமைச்சின் ஊடாக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திலிருந்து அங்கீகாரத்தை பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பித்தல் வேண்டும்.