வட்டி இல்லாத மாணவர் கடன் யோசனைத் திட்டம்
கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், க. பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
7 வது உட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்
க. பொ.த (உயர்தர) பரீட்சையில் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு www.studentloans.mohe.gov.lk இணையத்தளத்தின் மூலமாக இலகுபடுத்தப்பட்டுள்ள நிகழ் நிலை(Online) முறைமையைப் பயன்படுத்த வேண்டும்.
நிகழ் நிலை விண்ணப்பங்களை 04 ஜூலை 2023 முதல் ஆகஸ்ட் 07, 2023 அன்று மதியம் 12.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.